நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளி, சாமி செட்டியை சேர்ந்தவர் பழனி; கோவை, சேரன்மாநகர், வி.கே.ரோட்டில், மனைவி சரசு, மகன் பரதன் மற்றும் மகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கட்டட வேலைக்கு சென்று வந்த பழனி, தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். மகனும், மகளும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில், சேரன்மாநகர் பஸ் ஸ்டாப்பில், சரசு நின்று கொண்டிருந்தார். குடிபோதையில் இருந்த பழனி, அரிவாளால் சரசு மார்பு, இடுப்பு பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தினார். அப்பகுதியில் நின்றவர்கள் கூச்சலிட்டனர்.
உடனடியாக, சரசுவை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பீளமேடு போலீசார் விசாரித்து, பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.