/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவியை அடித்து கொன்ற குடிகார கணவனுக்கு 'ஆயுள்'
/
மனைவியை அடித்து கொன்ற குடிகார கணவனுக்கு 'ஆயுள்'
ADDED : செப் 01, 2025 07:31 PM
கோவை:
குடிபோதையில், மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு, ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சூலுார் அருகே பூராண்டாம்பாளையம், குட்டை தோட்டம் என்ற இடத்தில் தென்னந்தோப்பில் வசித்து வந்தவர் தர்மராஜ்,50; மனைவி உமா,40; மாற்றுத்திறனாளி. இருவரும் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம். 2024, மே 10ல், பொருட்கள் வாங்க தர்மராஜ் கடைக்குச் சென்றார். உமாவுக்கு போனில் அழைத்துபோது எடுக்கவில்லை.
கோபத்தில் இருந்த தர்மராஜ், மது குடித்து விட்டு போதையில் தோட்டத்துக்கு வந்தார். போன் அழைப்பை ஏன் எடுக்கவில்லை என்று கேட்டு, தகராறில் ஈடுபட்ட அவர், பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியும், சிமென்ட் கம்பத்தில் மோதியும், உமாவை கொலை செய்தார். சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்து, தர்மராஜை கைது செய்தனர்.
அவர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், மனைவியை கொன்ற தர்மராஜ்க்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.