தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிபோதையால் விபரீதம்: மூவருக்கு கத்திக்குத்து

குடிபோதையால் விபரீதம்: மூவருக்கு கத்திக்குத்து

குடிபோதையால் விபரீதம்: மூவருக்கு கத்திக்குத்து


UPDATED : அக் 13, 2026 07:20 PM

ADDED : அக் 13, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:20 PM ADDED : அக் 13, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெகமம்: நெகமம், கக்கடவு பகுதியை சேர்த்த கட்டட தொழிலாளி, மது போதையில் தனது குடும்பத்தாரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா, நெடும்பாறையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 27, கட்டட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, 7 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்துக்கு பின், நெகமம் அருகே உள்ள கக்கடவில் மனைவி அனிதா, 25, வீட்டில் வசிக்கிறார். இவர்களுக்கு, 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவருக்கு மது பழக்கம் உள்ளதால், வேலை முடித்து வீட்டுக்கு வரும்போது மது அருந்தி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவரது மாமியார் ராஜேஸ்வரி, 55, இனிமேல் மது குடிக்க கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லும்படியும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் கத்தியால், மகள், மனைவி, மாமியார் என, மூவரையும் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ்குமாரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us