தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 13, 2026 07:20 PM

ADDED : அக் 13, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:20 PM ADDED : அக் 13, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மாயவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமலை ராஜாராம் பேசினார். பொள்ளாச்சி கிளை துணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து மதுபான பெட்டிகளையும் ஸ்கேனிங் செய்யும் பணிக்கு இரண்டு ஆண்டு காலமாக கூலியே வழங்கவில்லை. இதற்கான கூலியை நிர்ணயித்து வழங்க வேண்டும்.

குடோன் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு மதுபான பெட்டிகளை கடைகளுக்கு அனுப்ப ஏற்றுக்கூலி, 5 ரூபாய் என்பதை டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். சட்டப்படி அனைவருக்கும் பிடித்தம் செய்வதை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும்.

சட்டப்படியான ஆண்டு போனஸ், தீபாவளி பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். குடிநீர், குளியலறை, கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். ‘லோடு பாய்ன்ட்’ மேற்கூரை, பிளாட்பார்ம், டிராலிகள், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்.

‘ஹேண்ட்லிங் லாஸ்’ என்ற பெயரில் பணம் கட்ட சொல்வதை கைவிட வேண்டும். 2027 ஜன., முதல் இறக்கு கூலி உயர்வை அமல்படுத்தவும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us