/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தந்தை கொலை வழக்கில் குடிகார மகனுக்கு 'ஆயுள்'
/
தந்தை கொலை வழக்கில் குடிகார மகனுக்கு 'ஆயுள்'
ADDED : அக் 19, 2024 06:37 AM
கோவை : கோவை, பீளமேடு துரைசாமி லே அவுட்டில் வசித்து வந்தவர் துரைராஜ்,80. வயதாகி விட்டதால், இவரது மனைவி ராஜேஸ்வரி, குடும்ப செலவை சமாளிக்க வீட்டு வேலைக்கு சென்றார். இவர்களது மகன் ரவிராஜ்,53, மனைவி மற்றும் மூன்று மகன்களுடன், அதே பகுதியில் வசித்து வந்தார்.
காவலாளியாக வேலை பார்த்த இவர், அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். அவர்சத்தம் போடவே, தனியாக அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில், 2021 அக்., 14ல், வீட்டில் தனியாக இருந்த தந்தை துரைராஜிடம் மது குடிக்க பணம் கேட்ட போது, அவர் கொடுக்க மறுத்து திட்டியுள்ளார். ரவிராஜ் ஆத்திரமடைந்து தந்தை துரைராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
பீளமேடு போலீசார் விசாரித்து, ரவிராஜை கைது செய்து, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குதொடுத்தனர். விசாரித்த நீதிபதி பத்மா, ரவிராஜிக்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.

