/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிகார தொழிலாளி வீட்டில் மர்ம மரணம்
/
குடிகார தொழிலாளி வீட்டில் மர்ம மரணம்
ADDED : ஏப் 24, 2025 11:18 PM
தொண்டாமுத்தூர், ; தீத்திபாளையம், காந்தி காலனியை சேர்ந்தவர் சிவமூர்த்தி, 26; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, ஷாலினி என்ற மனைவியும், இரு மகன்கள் உள்ளனர். சிவமூர்த்தி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் மதுகுடித்துவிட்டு வருவார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். வழக்கம்போல, நேற்றுமுன்தினம் மாலையும், சிவமூர்த்தி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது, தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இனி மது அருந்தி வரக்கூடாது என, கண்டித்துவிட்டு அருகிலுள்ள மளிகை கடைக்கு மனைவி சென்றுள்ள்ளார். சிவமூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறிதுநேரம் கழித்து, ஷாலினி வீடு திரும்பியபோது, சிவமூர்த்தி வீட்டில் தூக்கிட்டு மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார்.  தகவல் அறிந்த பேரூர் போலீசார், உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

