/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது
/
போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது
ADDED : டிச 01, 2024 01:43 AM
கோவை:கோவை இருகூரை சேர்ந்தவர் சோம்நாத், 24; தனியார் மினி பஸ் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் மதன், 40; இவர் இருகூரில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
மேலும், வீட்டில் பூஜை, மாந்திரீகம் செய்து வந்துள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மதன், அருகில் இருந்த கல்லை எடுத்து சோம்நாத் தலையில் போட்டுள்ளார். பலத்த காயமடைந்த சோம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த, சிங்காநல்லுார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோம்நாத்தின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.