/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தரையிறங்கிய துபாய் விமானம்
/
கோவையில் தரையிறங்கிய துபாய் விமானம்
ADDED : அக் 13, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம், மோசமான வானிலையால், கோவையில் தரையிறங்கியது. 3 மணி நேரத்துக்கு பின், மீண்டும் கோழிக்கோடு திரும்பியது.
துபாயில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோழிக்கோடு வந்தது. மழை மேகம் சூழ்ந்த நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க இயலவில்லை இதையடுத்து, கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
கோவையில் காலை, 7:30 மணிக்கு தரையிறங்கிய விமானம், 3 மணி நேரம் காத்திருந்தது. வானிலை சீரானபின், 10:20 மணி அளவில் கோழிக்கோடு புறப்பட்டுச் சென்றது. அவ்விமானத்தில், 100 பயணிகள் பயணித்தனர்.