/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆவணங்கள் இல்லாததால் ரூ. 5.70 லட்சம் பறிமுதல்
/
ஆவணங்கள் இல்லாததால் ரூ. 5.70 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 20, 2024 12:21 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில், முறையான ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, ஐந்து லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி தொகுதியில், பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, முறையான ஆவணங்களின்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணிப்பு செய்யப்படுகிறது.
அதில், ராமபட்டணம், மண்ணுார் அருகே கேரளாவில் இருந்து காரில் வந்த பொள்ளாச்சியை சேர்ந்த சேனாதிபதி, 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் முறையான ஆவணங்களின்றி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், என்ன காரணத்துக்காக பணம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
கோபாலபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கேரளா மாநிலத்தில் இருந்து கண்ணுாரை சேர்ந்த பாலன், ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் பணம் முறையான ஆவணங்களின்றி வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வால்பாறை சட்டசபை தொகுதியில், ஆனைமலை அருகே சுப்பேகவுண்டன்புதுார் சுங்கத்தில், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த காரை பரிசோதனை செய்த போது, திருச்சூர் பணிக்கஞ்சேரி பஷீர், எவ்வித ஆதாரமும் இல்லாமல் கொண்டு வந்த, இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

