/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறக்குது புழுதி; சிரமத்துல தவிக்கறாங்க மக்கள்! கிடப்பில் போடப்பட்ட பணிகளால் அதிருப்தி
/
பறக்குது புழுதி; சிரமத்துல தவிக்கறாங்க மக்கள்! கிடப்பில் போடப்பட்ட பணிகளால் அதிருப்தி
பறக்குது புழுதி; சிரமத்துல தவிக்கறாங்க மக்கள்! கிடப்பில் போடப்பட்ட பணிகளால் அதிருப்தி
பறக்குது புழுதி; சிரமத்துல தவிக்கறாங்க மக்கள்! கிடப்பில் போடப்பட்ட பணிகளால் அதிருப்தி
ADDED : டிச 29, 2024 11:51 PM

பொள்ளாச்சி; மேற்கு புறவழிச்சாலைக்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்காததால், பொள்ளாச்சி அருகே ஆர்.பொன்னாபுரம் புழுதிக்காடாக மாறி வாகன ஓட்டுநர்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகரில் நிலவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை, கோவை ரோடு ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, ஜமீன்முத்துார், நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில், ரோடு அமைக்கப்படுகிறது.
ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கிய பணிகள் முழுமை பெறாத நிலையில், கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதில், ஆர்.பொன்னாபுரம் பகுதியில், ரோடு தோண்டப்பட்டு, மோசமாக உள்ளது. இவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது, புழுதி பறப்பதால், பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ஆர்.பொன்னாபுரம் பகுதியில், மேற்குபுறவழிச்சாலை பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. உடனடியாக பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. ரோடுகள் புழுதிக்காடு போல மாறியுள்ளன.
இவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது அதிகளவு புழுதி பறந்து, இருசக்கர வாகன ஓட்டுநர்களின் கண்களை பதம் பார்க்கின்றன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதி பறப்பதால் விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கிறது.
குடியிருப்புகளுக்கு உள்ளேயும் புழுதி படர்ந்து விடுவதால் சிரமமாக உள்ளது. ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகளை எப்போது முடிப்பர் என தெரியாமல் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறோம். இதற்குரிய தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

