/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ- - ஆட்டோவுக்கு ரூ.4 லட்சம் கடன்
/
இ- - ஆட்டோவுக்கு ரூ.4 லட்சம் கடன்
ADDED : டிச 02, 2025 07:45 AM

கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பாப்பம்பட்டி கிளை வாயிலாக, வாடிக்கையாளருக்கு இ--ஆட்டோவுக்கான ரூ.4 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
தமிழக அரசு அறிவித்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கான இ--ஆட்டோ, பாப்பம்பட்டி கிளை வாயிலாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் தியாகு வரவேற்றார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
பாப்பம்பட்டி கிளை சிறப்பாக செயல்பட்டு, பொதுமக்களிடமிருந்து வைப்பு தொகையாக ரூ.23 கோடியும், கிளையின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு கடனாக ரூ.66.50 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இ--ஆட்டோ கடன் பெற, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆட்டோ ரிக் ஷா ஓட்டுவதற்கான பொது சேவை வாகன அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 25 -45 வயதுக்குள் இருக்க வேண்டும். விலைப்புள்ளியில் 10 சதவீதம் விளிம்பு தொகை செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

