/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-நாம் திட்டத்தில் எலுமிச்சை விற்கலாம்
/
இ-நாம் திட்டத்தில் எலுமிச்சை விற்கலாம்
ADDED : பிப் 10, 2025 06:24 AM
சூலுார் : 'இ--நாம் திட்டத்தின் கீழ், எலுமிச்சை, கொய்யா, வாழைத்தார் ஆகியவற்றை விற்பனை செய்ய முடியும், என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில், தென்னை, மக்காச்சோளம், காய்கறி மற்றும் வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை, அவர்களின் தோட்டத்துக்கே சென்று இ -நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்து தரும் பணியை ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் தமிழரசன் கூறியதாவது:
தேங்காய், தேங்காய் பருப்பு, வாழைக்காய், தக்காளி உள்ளிட்ட பொருட்களை இ--நாம் திட்டத்தின் கீழ் தோட்டத்துக்கே சென்று விற்பனை செய்து கொடுக்கிறோம். தற்போது அரசு உத்தரவுப்படி, கூடுதலாக எலுமிச்சை, வாழைப்பழம், மாங்காய், கொய்யா ஆகியவையும் விற்பனை செய்ய முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல், சந்தை மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும். விற்பனை செய்தவுடன், விவசாயிகளின் வங்கி கணக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தால், எவ்வித பிரச்னையும் இல்லாமல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் வர்த்தகம் நடக்கிறது.

