/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட்டில் இ - பைலிங் சேவை மையம் :வக்கீல்களுக்கு இனி இல்லை சிரமம்
/
கோர்ட்டில் இ - பைலிங் சேவை மையம் :வக்கீல்களுக்கு இனி இல்லை சிரமம்
கோர்ட்டில் இ - பைலிங் சேவை மையம் :வக்கீல்களுக்கு இனி இல்லை சிரமம்
கோர்ட்டில் இ - பைலிங் சேவை மையம் :வக்கீல்களுக்கு இனி இல்லை சிரமம்
ADDED : மார் 12, 2024 07:46 PM
கோவை;இ - பைலிங் முறையில், வழக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க, கோர்ட் வளாகத்தில், சேவை மையம் அமைக்கப்படுகிறது.
நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக தாக்கல் செய்யப்படும் நடை முறை மாற்றப்பட்டு, இ- கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், இ- பைலிங் முறையில் தாக்கல் செய்யும் புதிய நடைமுறை, கடந்தாண்டு செப்., முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜாமின் மற்றும் முன்ஜாமின் மனுக்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வாடகை கட்டுப்பாடு, மேல்முறையீடு, மறுசீராய்வு மனுக்கள், நிறைவேற்று மனுக்கள், தனிநபர் புகார், கிரிமினல் வழக்குகளில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல், குற்ற வழக்கு மேல்முறையீடு மற்றும் மறுசீராய்வு மனுக்களும் இ- பைலிங் முறையில், தாக்கல் செய்யப்படுகின்றன.
இரண்டாவது மேல்முறையீடு, குற்றவியல் மேல்முறையீடு மற்றும் அனைத்து ஜாமின் மனுக்கள், நிபந்தனை தளர்வு, ஜாமின்வழங்குவதற்கான கால நீட்டிப்பு மற்றும் நிபந்தனையை மாற்றியமைத்தல் போன்றவற்றிலும், இ- பைலிங் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இ- பைலிங் முறையால், வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதால், புதிய முறையை நிறுத்தி வைக்கக்கோரி, வக்கீல் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
வக்கீல்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகு, இப்புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று, தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.
ஐகோர்ட் முடிவு
இ- பைலிங் முறையில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணவும், வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உதவும் வகையிலும், நீதிமன்ற வளாகத்தில், இ- பைலிங் சேவை மையம் அமைக்க, ஐகோர்ட் முடிவு செய்தது.
இதற்காக, தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற வளாகங்களில், இ- பைலிங் சேவை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ஆறு இடங்களில் சேவை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை கோர்ட் வளாகத்திலும் அமைக்கப்படுகிறது.
இதற்காக, மரப்பலகையால் தற்காலிக செட் அமைக்கப்பட்டு அலுவலகம் செயல்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

