தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டபிள்யூ.டபிள்யூ.எப்., சார்பில் புவி நேரம்

 டபிள்யூ.டபிள்யூ.எப்., சார்பில் புவி நேரம்

 டபிள்யூ.டபிள்யூ.எப்., சார்பில் புவி நேரம்


ADDED : மார் 31, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உலகளாவிய இயற்கை நிதியம் (டபிள்யூ.டபிள்யூ.எப்.,) மற்றும் புவிக்காக அறக்கட்டளை இணைந்து, ஸ்ரீசக்தி இன்ஜி., கல்லூரியில் 'புவிநேரம்' அனுசரிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் கடைசி சனிக்கிழமை இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை தேவையற்ற மின்விளக்குகளை அணைப்பதன் வாயிலாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

முத்துக்கவுண்டன்புதுாரில் உள்ள ஆச்சான்குளத்தில், துாய்மைப் பணி மற்றும் இயற்கை நடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர். பின்னர், பூமிக்காக 60 நிமிடங்கள் என்பதை உணர்த்தும் விதத்தில், மாணவர்கள், '60' வடிவில் நின்று உறுதிமொழியேற்றனர். வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us