/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னதான மண்டபம் கட்ட பூமி பூஜை
/
அன்னதான மண்டபம் கட்ட பூமி பூஜை
ADDED : ஏப் 14, 2025 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 65ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா, கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் அன்னதான மண்டபம் கட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், புதிய அன்னதான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கோவில் தந்திரி கலந்து கொண்டு, பூஜையை துவக்கி வைத்தார். கட்டுமான பணிகளை விரைவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பூஜையில் கோவில் கமிட்டியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

