sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிழக்கு குறுமைய விளையாட்டு; மாணவியர் அசத்தல்

/

கிழக்கு குறுமைய விளையாட்டு; மாணவியர் அசத்தல்

கிழக்கு குறுமைய விளையாட்டு; மாணவியர் அசத்தல்

கிழக்கு குறுமைய விளையாட்டு; மாணவியர் அசத்தல்


ADDED : ஆக 21, 2025 08:30 PM

Google News

ADDED : ஆக 21, 2025 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கிழக்கு குறுமைய விளையாட்டு போட்டியில், மாணவியர் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

பொள்ளாச்சி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், கிழக்கு குறுமைய அளவிலான, 14, 17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவு விளையாட்டு போட்டிகள், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில் நடந்தது.

உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதல்வர் வனிதாமணி, மூத்த உடற்கல்வி ஆசிரியர் கோபால்சாமி ஆகியோர், போட்டிகளை துவக்கி வைத்தனர்.

14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, கால்பந்து போட்டியில் வடசித்தார் அரசு மேல்நிலைப்பள்ளி, வாலிபாலில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றன.

எறிபந்து போட்டியில் விஸ்வதீப்தி பள்ளி, கோகோ போட்டியில் வதம்பச்சேரி எஸ்.சி.எம். மேல்நிலைப்பள்ளி, பூப்பந்து போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கபடி போட்டியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் குட்ெஷப்பர்டு மெட்ரிக் பள்ளிகள் முதலிடம் பெற்றன.

17 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்து போட்டியில் விஸ்வதீப்தி மெட்ரிக் பள்ளி, கால்பந்து போட்டியில் வடசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, வாலிபால் போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எறிபந்து போட்டியில் விஸ்வதீப்தி பள்ளி முதலிடம் பெற்றன.

கோகோ போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எறிபந்து போட்டியில் காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பூப்பந்து போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கபடி போட்டியில் அப்பநாயக்கன்பட்டி வெங்கடேஷ்வரா உயர்நிலைப்பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் ஆதித்யா மெட்ரிக் பள்ளி, இரட்டையர் பிரிவில் விஸ்வதீப்தி பள்ளிகள் முதலிடம் பெற்றன.

19 வயதுக்கு உட்பட்ட கூடைப்பந்து போட்டியில், ஏ.எம்.எஸ். பள்ளி முதலிடமும், கால்பந்து போட்டியில் வடசித்துார் அரசு பள்ளி, வாலிபாலில் செஞ்சேரிமலை அரசுப்பள்ளி, எறிபந்து போட்டியில் ஏ.எம்.எஸ். பள்ளி, கோகோ போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் பெற்றன.

கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.என்.வி. மெட்ரிக் பள்ளி, பூப்பந்து போட்டியில் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கபடியில் எஸ்.ஆர்.என்.வி. மெட்ரிக் பள்ளி, மேஜைப்பந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவில் வடசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் முதலிடம் பெற்றன.

போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் துணை முதல்வர் பாரதி தலைமையில் மாணவ, மாணவியர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us