/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தேவாலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 21, 2025 04:45 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நேற்று ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால், புனித வாரம் கொண்டாடப்படுகிறது. திருநீற்று (விபூதி) புதனில் துவங்கி, பெரிய வெள்ளி வரை, 40 நாட்கள் விரதம் இருந்து இயேசுவை வழிபாடு செய்கின்றனர்.
அவ்வகையில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஏந்தி வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து புனித வெள்ளியன்று இறந்த நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி, ஆராதனைகள் ஆலயத்தில் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை, ஈஸ்டர் பெரு விழாவாக, நேற்று கொண்டாடினர். ஆலய பீடம் பூக்களாலும், மின் விளக்குகளாலும் உயிர்த்தெழுந்த இயேசுவின் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி புனித லுார்து அன்னை தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு ஈஸ்டர் பெருவிழா துவங்கி, அதிகாலை வரை கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில், புதிய தீர்த்தம் மந்திரித்தல், புது நெருப்பு மந்திரித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, திருப்பலி நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஈஸ்டர் பெருவிழா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
வால்பாறை
வால்பாறை சி.எஸ்.ஐ., தேவாலயம், திருஇருதய தேவாலயம், சென்லுக்சர்ச், ரொட்டிக்கடை புனித வனத்துசின்னப்பர் ஆலயம், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று, சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப்பாடற் திருப்பலி நடைபெற்றன. ஈஸ்டர் பண்டிகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

