/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் துவக்கம்
/
கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் துவக்கம்
கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் துவக்கம்
கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் துவக்கம்
ADDED : ஆக 29, 2025 01:36 AM
அன்னுார்; கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் பல்லடத்தில் இருந்து நான்கு கி.மீ., தொலைவில் வலது புறம் பிரிந்து பரமசிவம்பாளையம், சென்னி ஆண்டவர் கோவில், கிட்டாம்பாளையம் மற்றும் அன்னுாரின் தெற்குப் பகுதியில் சென்று, காரமடைக்கும், பெரியநாயக்கன்பாளையத்துக்கும் இடையே சேரும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்தப் பகுதியில் சர்வே மற்றும் மார்க்கிங் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை :
இந்த புதிய சாலை, சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்வதற்காக அமைக்கப்படுகிற சாலை. ஏற்கனவே காரணம்பேட்டை முதல் அன்னுார் வரையிலும் உள்ள சாலையையும், அன்னுார் முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலையையும், மாவட்ட, கிராம சாலைகளையும் மேம்படுத்தினாலே போதுமானது.
மக்களின் வரிப்பணத்தில் மக்களை சுரண்டுவதற்காக அமைக்கக்கூடிய இந்த கிழக்கு புறவழிச் சாலையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்காக கோவை கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் தொடர்ந்து அரசை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.