தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிழக்கு குறுமைய போட்டி: மாணவர்கள் அசத்தல்

கிழக்கு குறுமைய போட்டி: மாணவர்கள் அசத்தல்

கிழக்கு குறுமைய போட்டி: மாணவர்கள் அசத்தல்


ADDED : ஆக 10, 2025 10:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 10:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி கிழக்கு குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், சங்கவி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அதில், மாணவர்களுக்கான வளையபந்து போட்டிகள் நடைபெற்றன.

14வயதுக்கு உட்பட்ட மாணவர் ஒற்றையர் பிரிவில், கஞ்சம்பட்டி அரசுப்பள்ளி மாணவர் நரேன் முதலிடமும், வெங்கிட்ராஜ் பள்ளி சுதர்சன் இரண்டாமிடமும் பெற்றனர்.இரட்டையர் பிரிவு, வெங்கிட்ராஜ் பள்ளி ஜீவா ஆலன், சுதர்சன் முதலிடமும்; கஞ்சம்பட்டி அரசு பள்ளி நரேன், பிரவின்ராஜ் இரண்டாமிடமும் பெற்றனர்.

17 வயது ஒற்றையர் பிரிவில், வெங்கிட்ராஜ் பள்ளி பிரஜித் முதலிடமும், விஸ்வதீப்தி பள்ளி அபிநந்த் இரண்டாமிடமும் பெற்றனர்.இரட்டையர் பிரிவில், வெங்கிட்ராஜ் பள்ளி சந்தானசெல்வம், பிரஜித் முதலிடமும்; கஞ்சம்பட்டி பள்ளி தமிழ்ச்செல்வன், கார்த்திக்கேயன் இரண்டாமிடமும் பெற்றனர்.

19வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில், எஸ்.ஆர்.என்.வி. பள்ளி பத்மானந்த் முதலிடமும், கஞ்சம்பட்டி பள்ளி ஆதித்யன் இரண்டாமிடமும் பெற்றனர்.

இரட்டையர் பிரிவில், எஸ்.ஆர்.என்.வி. பள்ளி பத்மானந்த், தருண் ஆகியோர் முதலிடமும்; கஞ்சம்பட்டி பள்ளி ஆதித்யன், மகுடீஸ்வரன் இரண்டாமிடமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, பள்ளி ஆலோசகர் கோபால்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முதல்வர் ரமாதேவி, உடற்கல்வி ஆசிரியர் சந்திரபாபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us