ADDED : பிப் 13, 2026 05:12 AM

போ ர்வெல் அமைக்க அகலமான, உயரமாக இடம் வேண்டும் என்ற கவலை இனி வேண்டாம். 20 ஆண்டுகளாக போர்வெல் துறையில் சிறந்து விளங்கும் ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ் நிறுவனம், குறுகலான இடத்திலும் எளிதாக போர்வெல் அமைத்து தருகின்றனர்.
இங்கு 8 போர்வெல் யூனிட்கள் உள்ளன. 3டி சாட்டிலைட் ஜியாலஜிக்கல் முறையில் நீரோட்டம் பார்த்து, 4.5, 4.75, 5, 6.5 இன்ச் அளவுகளில் வண்டி நிற்கும் இடத்திலிருந்து, ஆயிரம் அடி துாரத்தில் போர் அமைத்து தரப்படும்.
பழைய போர்வெல்களை பெரிதுபடுத்தி தருகின்றனர். 3 அடி சந்திலும் போர்வெல் அமைத்துத்தர முடியும். 10 அடி உயர அறை இருந்தால் போதும், வீட்டிற்குள் கூட போர் போடலாம் என்கிறார் உரிமையாளர்.
அனைத்து விதமான 'பிட்'கள் இருப்பதால் எந்த இடத்திலும் போர் போட்டு தர முடிகிறது. 'சைடு போர்' தொழில்துறையில் பயன்பாடு மற்றும் துாண்கள் அமைக்க பெரிய அளவிலான 'போர்'களும் போடுகின்றனர்.போரில் மாட்டிக்கொண்ட மோட்டார்களை எடுத்து போர் சரிசெய்து தரப்படும்.
- ஸ்ரீ கார்த்திக் போர்வெல்ஸ்: -94867 66957:
