/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்: ஊட்டச்சத்து நிபுணர்
/
பாதாம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்: ஊட்டச்சத்து நிபுணர்
பாதாம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்: ஊட்டச்சத்து நிபுணர்
பாதாம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்: ஊட்டச்சத்து நிபுணர்
ADDED : பிப் 04, 2024 01:03 AM

''பாதாம் பருப்பில், கார்போஹைட்ரேட் அளவு மிக குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்,'' என்கிறார் ஊட்டச்சத்து உணவு நிபுணர் மற்றும் ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமி.
பாதாம் பருப்பில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதில் கார்போஹைட்ரேட் அளவு மிக குறைவாகவும், புரோட்டீன் சத்து அதிகமாகவும் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என, மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் பரிந்துரைத்து வருகின்றனர்.
புரத உணவின் முக்கியத்துவம் குறித்து, கலிபோர்னியாவின் பாதாம் வாரியம் சார்பில், சமீபத்தில் கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க வந்திருந்த, பெங்களூருவை சேர்ந்தஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆலோசகர் ஷீலா கிருஷ்ணசாமியிடம் பேசினோம்...!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, புரோட்டீன் சத்து மிகவும் அவசியமானது. அது உடலுக்குள் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் புரோட்டீன் பற்றாக்குறையால் பலர் அவதிப்படுகின்றனர்.
நல்ல புரத சத்து, பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு கைப்பிடி அளவு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, தோலை நீக்கி விட்டு சாப்பிட்டால், தேவையான நல்ல புரோட்டீன் சத்து நம் உடலுக்கு கிடைத்து விடும்.
பாதாம் பருப்பில் கார்போஹைட்ரேட் அளவு, மிக குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில், அல்லது பசி எடுக்கும் போது பாதாம் பருப்பை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு குறையும். எல்லா வயதினருக்கும் ஏற்ற புரத உணவாக பாதாம் உள்ளது.
சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில், 73 சதவீத இந்தியர்கள் தேவையான புரோட்டினை எடுத்துக்கொள்வது இல்லை என, தெரிய வந்திருக்கிறது. 30 கிராம் பாதாமில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது.
ஜிங்க், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் உள்ளிட்ட பல சத்துக்களும் பாதாமில் உள்ளன. சைவ உணவு சாப்பிடுபவர்கள் சோயா பீன்ஸ், விதைகள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர்.
இவர்கள் பாதாம் சாப்பிடும் போது, முழுமையான புரோட்டீன் சத்து கிடைக்கும். பாதாமில் இயற்கையான புரோட்டீன் கிடைக்கிறது. எல்லோரும் ஒரு கைப்பிடி அளவு, பாதாம் தினமும் சாப்பிடலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.