/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.கம்யூ., நுாற்றாண்டு விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
/
இ.கம்யூ., நுாற்றாண்டு விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
இ.கம்யூ., நுாற்றாண்டு விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
இ.கம்யூ., நுாற்றாண்டு விழா கேக் வெட்டி கொண்டாட்டம்
ADDED : ஜன 04, 2025 11:04 PM

கோவை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு விழா, கோவை உக்கடத்தில் உள்ளசிங்காரவேலர் கிளை நுாலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, இ.கம்யூ., நிர்வாகி சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் புருசோத்தமன், 'நூற்றாண்டு கண்ட இ.கம்யூ., வரலாறு' என்ற தலைப்பில் பேசினார்.
வக்கீல் சுப்பிரமணியன், நல்லகண்ணுவின் நுாறாவது பிறந்த நாள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
அனைத்து இந்திய இளைஞர் மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிபாரதி, நாகராஜ், முருகன், கணேசன், வேல்முருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, நுாறு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.