/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.கம்யூ., நூற்றாண்டு நிறைவு பொங்கல் விழா
/
இ.கம்யூ., நூற்றாண்டு நிறைவு பொங்கல் விழா
ADDED : ஜன 17, 2026 05:12 AM
கோவை: இ.கம்யூ., நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 20ம் ஆண்டு பொங்கல் விழா, வேலாண்டிபாளையம் அரு கில் உள்ள வெங்கடாபுரத்தில் நேற்று நடந்து. முன்னாள் கவுன்சிலர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.
இ.கம்யூ., மாநில துணைச் செயலாளர் ரவி கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து உரையாற்றி, கட்சியில் நீண்ட காலம் உறுப்பினர்களாக இருந்து, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினார். பொங்கலை முன்னிட்டு காலையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஓட்டப்பந்தயம், சாக்குப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், பலுான் உடைத்தல் போட்டிகளும் மாலையில் பெண்களுக்கான இசைப்பந்து, லக்கி கார்னர், குண்டு எறிதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
கிளை செயலாளர் பத்மநாபன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அசரப் அலி, இ.கம்யூ., மேற்கு மண்டல செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கெற்றனர்.

