/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
/
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ADDED : அக் 03, 2025 09:21 PM

வால்பாறை; நீண்ட இடைவெளிக்கு பின், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தொடர் விடுமுறையில், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் திரண்டுள்ளனர்.
நகரிலுள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயின்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை, அதிக அளவில் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்ததால், சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானவர்கள் ஆற்று பகுதியில் திரண்டு ஆடி, குளித்து மகிழ்ந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்ததாலும், மேல்நீராறு அணையிலிருந்து சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், சுற்றுலாபயணியர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நீர்சுழல் நிறைந்த பகுதிக்கு செல்லாமல் தடுக்க, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.