/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் 'ஈகோபெஸ்ட் 2025'
/
வேளாண் பல்கலையில் 'ஈகோபெஸ்ட் 2025'
ADDED : மே 14, 2025 11:58 PM
கோவை; வேளாண் பல்கலையின் வேளாண் இன்ஜி., கல்லுாரி, ஆராய்ச்சி நிறுவனத்தின், 'ஈகோ பெஸ்ட் 2025' மாநாடு நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் பேசுகையில், ''சுற்றுச்சூழல், புதுமைகள், நிலையான ஸ்டார்ட் அப்கள், இன்றியமையாதவை. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபயன்பாடு செய்யும் வகையில், தீர்வுகளை காண வேண்டும். இளைய தலைமுறையின், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவம் ஆகியவை பாராட்டுதலுக்கு உரியது,'' என்றார்.
பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். வேளாண் இன்ஜினியரிங் கல்லுாரி டீன் ரவிராஜ், இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் காடுகள், மரபணு வளங்கள் மற்றும் மர மேம்பாடு திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், பெங்களூரு அக்வாஸ்டார் ஸ்மார்ட் ப்ளோ சொல்யூஷன்ஸ் இணை நிறுவனர் முத்து வெங்கடசெல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தேசிய, சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. 'ஈகோபெஸ்ட் 2025' விழா மலர் வெளியிடப்பட்டது.