/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலில் ரசாயனக் கழிவு தடுக்க கோருகிறது இ.கம்யூ.,
/
நொய்யலில் ரசாயனக் கழிவு தடுக்க கோருகிறது இ.கம்யூ.,
நொய்யலில் ரசாயனக் கழிவு தடுக்க கோருகிறது இ.கம்யூ.,
நொய்யலில் ரசாயனக் கழிவு தடுக்க கோருகிறது இ.கம்யூ.,
ADDED : ஆக 20, 2025 12:50 AM
கோவை; 'மதுக்கரை பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்' என, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
மதுக்கரை பெரும்பாலும் பனி மூட்டமான பகுதி. சிமென்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் சாம்பல், பனித்துளியில் கலப்பதால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுகிது.
நோய் தொற்றும் பரவுகிறது. மதுக்கரை மார்க்கெட், குரும்பபாளையம், காந்தி நகர், முஸ்லிம் காலனி, மரப்பாலம் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் துாசு பரவுகிறது.
தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள், நேரடியாக நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
நொய்யல் ஆற்று நீரை நம்பியுள்ள விவசாயிகள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர்நிலையில் ரசாயனக் கழிவு கலப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.