ADDED : நவ 19, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில், இ.கம்யூ., சார்பில், தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இ.கம்யூ., கோவை மாவட்ட செயலாளர் சிவசாமி பேசுகையில், ''இந்தியாவில்கனிம வளங்களை கொள்ளையடிக்க மலைவாழ் மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அப்புறப் படுத்தி வருகின்றனர். இதை கண்டித்தும், மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.'' என்றார்.
இ.கம்யூ., மாவட்டத் துணைச் செயலாளர்கள் தங்கவேல், ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

