'பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு விரைவுபடுத்தணும்'
'பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு விரைவுபடுத்தணும்'
ADDED : ஜன 21, 2026 05:02 AM
கோவை: மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கான ஆலோசனை கூட்டம், நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்குகளில், ரூ.10 கோடிக்கு மேல் உள்ள சொத்துக்களை முடக்கி, ஏலம் விட எஸ்.பி.க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்த இந்த அதிகாரம், தற்போது எஸ்.பி.க்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
நீண்ட கால நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. கிங்ஸ்லின் தலைமை வகித்தார்.
