தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பொருளியல், இயற்பியல் பொதுத்தேர்வு மிக எளிது' பிளஸ்2 மாணவர்கள் கருத்து

 'பொருளியல், இயற்பியல் பொதுத்தேர்வு மிக எளிது' பிளஸ்2 மாணவர்கள் கருத்து

 'பொருளியல், இயற்பியல் பொதுத்தேர்வு மிக எளிது' பிளஸ்2 மாணவர்கள் கருத்து


ADDED : மார் 14, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று பொருளியல், இயற்பியல் பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:

தனுஷ், கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திவான்சாபுதுார்: பொருளியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதி மிக எளிமையாக இருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாக்கள் புத்தகத்தின் உள்ள பகுதியில் இருந்து கேட்கப்பட்டாலும், அனைத்து வினாக்களும் நன்கு தெரிந்ததால் எளிதாக பதிலளிக்க முடிந்தது.

திவ்ய ஸ்ரீ, லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி: பொருளியல் தேர்வு நடுநிலையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு மட்டும் யோசித்து எழுதும்படி இருந்தது. கட்டாய வினாக்கள் இரண்டும், புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் நடுநிலையாக இருந்தன.

சந்திரஹரி, கந்தசாமி மெட்ரிக் பள்ளி, கணபதிபாளையம்: இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்களில், அக வினாக்களாக, 3 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. நன்கு பயிற்சி பெற்றதால் அவற்றுக்கு சரியான விடைகளை எழுத முடிந்தது. கட்டாய வினாக்களும், பிறபகுதி வினாக்களும் எளிமையாக இருந்தன. அனைத்தும் எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வெழுதியுள்ளேன்.

சக்தி ஹரினி, பாரதிய வித்யா மந்திர் பள்ளி, மகாலிங்கபுரம்: இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில், 10 வினாக்கள் பாட பிற்பகுதியில் இருந்தும், ஐந்து வினாக்கள் சிந்தித்து எழுதும்படியும் இருந்தன. மூன்று மதிப்பெண் வினாக்கள் சிந்தித்து எழுதும்படி இருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடியே எளிமையாக இருந்தன. பல திருப்புதல் தேர்வுகள் எழுதியதால், அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us