/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்
/
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்
எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்
ADDED : அக் 25, 2024 10:26 PM

கோவை: எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரியில் 'இன்டர்நெட் ஆப் திங்ஸ்' மற்றும் எட்ஜ் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு ஆய்வகம், நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அராகிரியேட் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் நவநீதன் கந்தராஜ் ஆய்வகத்தை திறந்து வைத்தார். இந்த புதிய கண்டுபிடிப்பு ஆய்வகம் அடுத்த, 10 ஆண்டுகளுக்குள், 1,000 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை வளர்ப்பதற்கான கல்லுாரியின் இலக்கை நோக்கி ஓர் உந்து சக்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றலை திறனை மேம்படுத்தி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் துவங்க மாணவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில், ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
துவக்க விழாவில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி முதல்வர் சார்லஸ், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செந்துார் பாண்டியன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.