/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பு பள்ளியில் கல்வி கண்காட்சி
/
தம்பு பள்ளியில் கல்வி கண்காட்சி
ADDED : ஜன 28, 2025 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி கண்காட்சியில் மாணவர், பெற்றோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், 25க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, பல்வேறு உயர் படிப்புகள், அது தொடர்பான வேலை வாய்ப்புகள் தொழில் குறித்து ஆலோசனை வழங்கினர்.
காலை, 10:00 மணி முதல் மாலை வரை நடந்த இக்கல்வி கண்காட்சி முகாமில் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வட்டார பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.