ADDED : ஜன 10, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. முதல்வர் எழிலி தலைமை வகித்தார்.
கல்வி, விளையாட்டு, என்.சி.சி., போன்ற பல்துறையில் சிறந்த விளங்கிய 36 மாணவர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில், அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
