தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'லேசர் கட்' வடிவமைப்பு

 'லேசர் கட்' வடிவமைப்பு

 'லேசர் கட்' வடிவமைப்பு


ADDED : ஜன 10, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'லே சர் கட்' வடிவமைப்பு என்பது கட்டடத்தின் முன்பக்க அழகையும், நவீன தோற்றத்தையும் வழங்க பயன்படும் ஒரு முக்கிய அலங்கார முறை. இவ்வகை வடிவமைப்பு வணிக கட்டடங்கள், அபார்ட்மென்ட்களில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக மைல்ட் ஸ்டீல்(எம்.எஸ்.,), அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்(எஸ்.எஸ்., 304/316) மற்றும் கார்டன் ஸ்டீல் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மைல்ட் ஸ்டீல் செலவு குறைவானது; ஆனால் முறையான பவுடர் கோட்டிங் தேவைப்படும்.

அலுமினியம் எடை குறைந்ததும், துருப்பிடிக்காத தன்மையுடனும் இருப்பதால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உயர்தர தோற்றமும் நீண்ட ஆயுளும் வழங்குகிறது. இந்த லேசர் கட் வடிவமைப்புகள் கட்டடத்தின் முன்பக்கம், பால்கனி ரெய்லிங், படிக்கட்டு ரெய்லிங், காம்பவுண்ட் சுவர், கேட், சன் ஸ்கிரீன், பார்ட்டிஷன் பேனல்களில் பயன் படுத்தப்படுகின்றன.

'காட்சியா' செயற்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் நம்மிடம் பகி ர்ந்து கொண்டதாவது...

வடிவமைப்புகளில் ஜியோமெட்ரிக், மலர் அலங்காரம், பாரம்பரிய மோட்டிப், நவீன 'அப்ஸ்ட்ராக்ட்' மற்றும் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப தனிப் பயன் வடிவங்கள் இடம்பெறுகின்றன. லேசர் கட் பேனல்களின் தடிமன் பொதுவாக, 2 மி.மீ., முதல் 6 மி.மீ., வரை இருக்கும்.

கட்டட வடிவமைப்புக்கு ஏற்ப பேனல்களின் அளவு தயாரிக்கப்படுகிறது. பவுடர் கோட்டிங், பி.யு., பேன்ட், அனோடைஸ்டு பினிஷ் மற்றும் மேட் அல்லது கிளாஸி பினிஷ் என பல வகைகளில் செய்யப்படுகின்றன. இவை நவீன மற்றும் உயர்தர தோற்றம் கொண்டது.

மிகுந்த துல்லியம், தேவைக்கேற்ற வடிவமைப்பு, நீண்ட ஆயுள், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் இயற்கை வெளிச்சம், காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. லேசர் கட் பேனல்கள் எம்.எஸ்., பிரேம் வாயிலாக சுவர் அல்லது ஆர்.சி.சி., கட்டமைப்பில் உறுதியாக பொருத்தப்படுகின்றன. எல்.இ.டி., லைட்டிங் இணைப்பதன் வாயிலாக, இரவு நேரத்தில் அழகான ஒளியை பெற முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us