தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெருக்கூத்து நடத்தி கல்வி விழிப்புணர்வு

 தெருக்கூத்து நடத்தி கல்வி விழிப்புணர்வு

 தெருக்கூத்து நடத்தி கல்வி விழிப்புணர்வு


ADDED : மார் 01, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 'பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற மையக்கருத்துடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்நடந்தது.

கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை வளாகம், செல்வபுரம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முக்கிய இடங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மூலம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணங்களை தடுக்கும் அவசியம் போன்றவை குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us