ADDED : ஜன 14, 2025 06:51 AM

மூன்றாமாண்டு விழா
பன்னீர்மடை, அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா, மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. ஜி.குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனையின்மருத்துவ இயக்குனர் சந்தோஷ் விஜயகுமார், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 2024ம் ஆண்டு நீட் தேர்வில், மாநில அளவில் முதலிடத்துடன் 705 மதிப்பெண் பெற்ற மாணவர் கனிஸ்வரனுக்கு, மருத்துவ மேற்படிப்புக்கான கல்வி ஊக்கத்தொகையாக, ரூ.ஒரு லட்சத்தை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கிஊக்குவித்தனர்.
இதேபோல், பத்தாம்மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கேடயம் மற்றும் காசோலை வழங்கினர்.
பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், மங்கள் ராம், காயத்ரி, பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.
தி சம்ஹிதா அகாடமியில் விழா
மலுமிச்சம்பட்டி, தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் ஆண்டு விழா, உலகத்தின் இசை என்ற பெயரில் நடந்தது. பள்ளியின் முதல்வர் புஷ்பஜா தலைமை வகித்தார். உலகின் இசை என்ற தலைப்பில், நாடகம், மைம், நடனங்கள் என வெவ்வேறு கலாசார நிகழ்வுகள் நடந்தன. கலைநிகழ்வுகள் ரசிக்க வைப்பதாகவும், சிந்தனையை துாண்டும் வகையிலும் இருந்தன. மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

