sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆதரவற்ற நிலையில் தவித்த பெண்ணை மீட்டது 'ஈரநெஞ்சம்'

/

ஆதரவற்ற நிலையில் தவித்த பெண்ணை மீட்டது 'ஈரநெஞ்சம்'

ஆதரவற்ற நிலையில் தவித்த பெண்ணை மீட்டது 'ஈரநெஞ்சம்'

ஆதரவற்ற நிலையில் தவித்த பெண்ணை மீட்டது 'ஈரநெஞ்சம்'


ADDED : பிப் 03, 2025 04:56 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டு இருந்த பெண்ணை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கடந்த மாதம், 30ம் தேதி தன் நிலை மறந்த நிலையில், ரோட்டோரம் தவித்துக் கொண்டு இருந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, சரவணம்பட்டி போலீசார் மீட்டனர்.

'ஈரநெஞ்சம்' முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் விசாரித்த போது, அவர் தனது பெயர் சித்ரா என்றும், சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகர் என்று மட்டும் கூறினார். தன் குடும்பத்தினர் பற்றிய மற்ற விவரங்களை, அவரால் சொல்ல முடியவில்லை.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த பெண்ணுக்கு, தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு, காப்பகத்தின் பராமரிப்பில் இருந்து வந்தார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அந்த பெண்ணின் உறவினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவரது புகைப்படம் மற்றும் அவர் தெரிவித்த விவரங்களை, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அதன் மூலம் அந்த பெண்ணின் அக்கா கிரேசா என்பவர் தொடர்பு கொண்டு, ஈர நெஞ்சம் காப்பகத்துக்கு வந்தார். சித்ராவின் அக்கா கிரேசா தெரிவித்த, விபரங்களை சரி பார்த்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் அந்த பெண்ணை பாதுகாப்பாக, அவரிடம் ஒப்படைத்தனர்.

ஆதரவற்ற நிலையில் இருந்த தன் சகோதரியை, பத்திரமாக மீட்டுக் கொடுத்ததற்காக, ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, கிரேசா கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us