/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் வடிகாலில் அடைப்பு; சீரமைக்க நடவடிக்கை தீவிரம்
/
மழையால் வடிகாலில் அடைப்பு; சீரமைக்க நடவடிக்கை தீவிரம்
மழையால் வடிகாலில் அடைப்பு; சீரமைக்க நடவடிக்கை தீவிரம்
மழையால் வடிகாலில் அடைப்பு; சீரமைக்க நடவடிக்கை தீவிரம்
ADDED : ஏப் 04, 2025 11:03 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளை அப்புறப்படுத்த, 50 துாய்மைப் பணியாளர்களை நியமித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பான மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன.
இருப்பினும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பாதாள சாக்கடை இணைப்பும் முழுமை பெறாததால், தெருவோரங்களில் உள்ள கால்வாய்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீதிகளில் குப்பை கொட்டுவதும் தொடர்கிறது.
மழையின்போது, ரோட்டில் செல்லும் வெள்ளத்தில் கழிவுகளும் அடித்து செல்லப்பட்டு, ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகரில், இரு நாட்களாக மழை பெய்யும் போது பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், நகராட்சி சுகாதாரத்துறையினர், மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற தீவிரம் காட்டினர். இதற்கென, 50 துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடனுக்குடன் குப்பையை அகற்றவும், சாக்கடை கால்வாய்களை துார்வாரி சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வடிகாலில் அடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட நிலையில், மழைக்கு முன்னரே சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கனமழை பெய்ததால், வடிகாலில் ஏற்படும் அடைப்பை அப்புறப்படுத்த துாய்மைப் பணியாளர்கள், தனியாக பணியமர்த்தப்பட்டனர். இதேபோல, ரோட்டில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்ததால், அவைகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, கூறினர்.