/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலையையொட்டி 22 குடியிருப்புகள் மாற்று குடியிருப்புகள் வழங்க முனைப்பு
/
நீர் நிலையையொட்டி 22 குடியிருப்புகள் மாற்று குடியிருப்புகள் வழங்க முனைப்பு
நீர் நிலையையொட்டி 22 குடியிருப்புகள் மாற்று குடியிருப்புகள் வழங்க முனைப்பு
நீர் நிலையையொட்டி 22 குடியிருப்புகள் மாற்று குடியிருப்புகள் வழங்க முனைப்பு
ADDED : மே 08, 2025 12:59 AM
கோவை; பீளமேடு அருகே சங்கனுார் ஓடையை ஒட்டி வசிப்பவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்கும் நடவடிக்கையை, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில், நீர் நிலைகளையொட்டி வசிப்பவர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு, சிவாஜி நகர் அருகே சங்கனுார் ஓடையை ஒட்டி, 22 குடியிருப்புகள் உள்ளன.
நீர் நிலையை ஒட்டி ஆக்கிரமிப்பில் இருக்கும் இக்குடியிருப்புகளை அப்புறப்படுத்தி, மாற்று குடியிருப்புகள் வழங்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், சிவாஜி நகரில் ஆய்வு செய்தார். அங்கு, சங்கனுார் ஓடையையொட்டிய குடியிருப்புகளில், வசிப்பவர்களிடம் மாற்று குடியிருப்புகள் ஒதுக்கீடு குறித்து கமிஷனர் கருத்துகள் கேட்டறிந்தார்.
இதையடுத்து, விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சங்கனுார் ஓடையை ஒட்டி, 22 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களிடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்வது குறித்து விளக்கம் அளித்தோம்.
அப்போது, சூலுார் பகுதியில் உள்ள வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், ஒதுக்கீடு பெற பலர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது' என்றனர்.

