/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை
/
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை
சுரங்கப் பாதைகளில் கூடுதலாக எட்டு மோட்டார்கள்; மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை
ADDED : நவ 01, 2024 10:35 PM

கோவை; கோவையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனுக்குடன் அகற்றுவதற்காக, கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
கோவை மாநகர பகுதியில் மழை பெய்தால் லங்கா கார்னர், உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தின் சுரங்கப் பாதை, காளீஸ்வரா மில், கிக்கானி ரயில்வே பாலம் மற்றும் வடகோவை சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கை. இவற்றை வெளியேற்ற மோட்டார் பம்ப்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
குறுகிய நேரத்தில் அதிகமான தண்ணீர் வந்து விடுவதால், சுரங்கப்பாதை முழுவதும் நிரம்பி விடுகிறது. கடந்த முறை மழை பெய்து மின்சாரம் தடைபட்டதால், மோட்டார் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தண்டவாளத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.
இன்னும் சில மணி நேரம் மழை தொடர்ந்திருந்தால், வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருந்ததால், உஷாரடைந்த மாநகராட்சி நிர்வாகம், தண்ணீர் தேங்கும் அனைத்து இடங்களிலும் கூடுதல் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காளீஸ்வரா மில் பாலத்தில் ஏற்கனவே, 20 எச்.பி., மோட்டார், 125 கேவிஏ திறனுள்ள ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 36 எச்.பி., ஒன்று, 21 எச்.பி., மோட்டார் இரண்டு பொருத்தப்பட்டுள்ளன. லங்கா கார்னரில், 20 எச்.பி., மோட்டார், 82.5 கேவிஏ ஜெனரேட்டர் உள்ளன. கூடுதலாக, 21 எச்.பி., மோட்டார் வைக்கப்பட்டுள்ளது.
கிக்கானி பாலத்தில் 20 எச்.பி., இரண்டு மற்றும் 7.5 எச்.பி., மோட்டார், 125 கேவிஏ ஜெனரேட்டர் இருக்கின்றன. கூடுதலாக, 28 எச்.பி., மோட்டார் வைக்கப்பட்டுள்ளன. அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில், 30 எச்.பி., இரண்டு, 12 எச்.பி., - 50 எச்.பி., - 40 எச்.பி., - 20 எச்.பி., மோட்டார்கள், 160 கேவிஏ திறனுள்ள ஜெனரேட்டர் உள்ளன. கூடுதலாக, 28 எச்.பி., - 24 எச்.பி., - 28 எச்.பி., மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக, எட்டு மோட்டார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வரும் நாட்களில் மழைப்பொழிவு கூடுதலாக பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதைகளில் ஏற்கனவே, 11 மோட்டார் பம்ப்கள் உள்ளன. கூடுதலாக எட்டு மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. செல்வ சிந்தாமணி குளத்தில் மதகு லேசாக திறக்கப்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் புகாத அளவுக்கு வெளியேற்றப்படுகிறது' என்றனர்.

