/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிராமணர் சங்கம் சார்பில் ஏகாதசி பஜன்
/
பிராமணர் சங்கம் சார்பில் ஏகாதசி பஜன்
ADDED : ஏப் 24, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; அகில பாரத பிராமணர் சங்க மகளிரணி சார்பில், உலக நன்மை வேண்டி ஏகாதசி பஜன் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
ராம்நகர் எஸ்.என்.வி., மண்டபத்தில், பஜன் நிகழ்ச்சி நடந்தது. இதில் மகளிரணியின், 15 பெண்கள், 25 க்கும் மேற்பட்ட ராதாகிருஷ்ணன், பெருமாள் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில், பக்தி பாடல்களை பாடினர்.
நிகழ்ச்சியில், மாநிலத்தலைவர் குளத்துமணி ஐயர், மாநில பொதுச்செயலாளர் ராமசுந்தரம், கோவை மாவட்டத் தலைவர் வெங்கட்ரமணி, மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள், சித்ரா, பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

