/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாஜி கோவிலில் 30ல் ஏகாதசி விழா
/
பாலாஜி கோவிலில் 30ல் ஏகாதசி விழா
ADDED : டிச 26, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, கருமலை பாலாஜி கோவிலில் வரும், 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பாலாஜி கோவிலில், வரும் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.விழாவையொட்டி, வரும், 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்திசேவை நடக்கிறது.
வரும், 30ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பாலாஜி சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

