/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவரிடம் ரூ.20 லட்சம் மோசடி
/
முதியவரிடம் ரூ.20 லட்சம் மோசடி
ADDED : நவ 28, 2025 03:14 AM
கோவை: குனியமுத்துாரை சேர்ந்தவர், 72 வயது முதியவர். இவரை சில தினங்களுக்கு முன் தொடர்பு கொண்ட சிலர், என்.ஐ.ஏ.,வில் இருந்து பேசுவதாகவும், சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் முதியவருக்கு தொடர்பு இருப்பதாகவும், காஷ்மீரில் அவரது ஆதார் அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி, பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவரது மற்றொரு வங்கிக்கணக்கு உள்ளிட்ட விபரங்களை பெற்றனர். இதை சரிசெய்ய பணம் அனுப்ப வலியுறுத்தியுள்ளனர். முதியவரும் அதை நம்பி, ரூ.20 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக்கணக்கிற்கு அனுப்பியுள்ளார். விசாரணை முடிந்தபின், பணம் திருப்பி அனுப்பப்படும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பணம் திருப்பி அனுப்பப்படவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள இயலவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

