/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்
/
இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : நவ 28, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2024 ஏப். 1 முதல், 2025 மார்ச் 31 வரை, செய்யப்பட்ட பணிகளை சமூக தணிக்கை செய்யும் பணி கடந்த 24 ம் தேதி முதல் நேற்று வரை குன்னத்தூர் மற்றும் அல்லப்பாளையம் ஊராட்சிகளில் நடைபெற்றது.
வட்டார வள அலுவலர் தலைமையில் தணிக்கையாளர்கள் பணிகளை அளவீடு செய்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் இரு ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
இதில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது. என்னென்ன பணிகள் செய்யப்பட்டன என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

