ADDED : ஜூலை 20, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்,; மோட்டார் பைக் மோதிய விபத்தில் கோவில் பூசாரி இறந்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 63. கோவில் பூசாரி. இவர் நேற்று மதியம் கோவில்பாளையத்தில் பூரண்டாம் பாளையம் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே திசையில், அரசூரைச் சேர்ந்த தனியார் பவுண்டரி தொழிலாளி, மாருதி நந்தா, 22, என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் பைக், மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கோவில் பூசாரி ஆறுமுகம், அதே இடத்தில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய மாருதி நந்தாவின் இடது கால் முறிந்தது.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விபத்து ஏற்படுத்திய மாருதி நந்தா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.