ADDED : ஆக 20, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் அருகே கிரேன் மோதியதில் நடந்து சென்ற முதியவர் இறந்தார்.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் அன்னுார் அருகே மாணிக்கம் பாளையத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இவருடைய தந்தை சுப்பிரமணியம், 75. தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் காலை மாணிக்கம் பாளையம், மேட்டுக்கடை அருகே நடந்து செல்லும் போது, அதே வழியில் வேகமாக வந்த கிரேன், சுப்பிரமணியம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் இறந்தார்.
அன்னுார் போலீசார், கிரேன் டிரைவர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.