/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் விழுந்த முதியவர் பலி
/
குளத்தில் விழுந்த முதியவர் பலி
ADDED : ஜன 02, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள முடீஸ், கெஜமுடி எஸ்டேட் மேல்பிரட்டை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவரது கணவர் ராமசாமி,66. இவர், நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அதன்பின் அருகில் உள்ள குளத்தில் கால்தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, முடீஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

