/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்றுகுட்டியை காப்பாற்ற முயன்ற முதியவர் பலி
/
கன்றுகுட்டியை காப்பாற்ற முயன்ற முதியவர் பலி
ADDED : அக் 21, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: மதுக்கரையை அடுத்த பாலத்துறையை சேர்ந்தவர் நடராசன், 71. இரு தினங்களுக்கு முன் இவர் தனது தோட்டத்தில், கன்று குட்டியை கட்டி வைத்திருந்தார். எதிர்பாராதவிதமாக குட்டி, கிணற்றினுள் தவறி விழுந்தது. அதனை மீட்க, நடராசன் கிணற்றினுள் இறங்கினார். நிலை தடுமாறி நீரினுள் விழுந்தார்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களால், நீரில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தைதான் மீட்க முடிந்தது. மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.