/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் திருடியதாக முதியவருக்கு சிறை
/
பைக் திருடியதாக முதியவருக்கு சிறை
ADDED : ஜூலை 27, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை என்.எச்., ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில், 52. நண்பரை வழியனுப்ப பைக்கில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். குட் செட் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் வாயில் முன் பைக்கை நிறுத்தி விட்டு, ஸ்டேஷனுக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக் மாயமாகியிருந்தது.
இதுகுறித்து இஸ்மாயில், உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.
விசாரணையில், கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இக்பால், 62 என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் முகமது இக்பாலை சிறையில் அடைத்தனர்.