ADDED : ஜூலை 10, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை பி.என்., புதுாரை சேர்ந்தவர் மணியன், 80. இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் மணியன் வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேச்சு கொடுத்தார்.
மணியன் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது, அந்த நபர் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்து மணியனை முகர்ந்து பார்க்க கூறினார். அதை மணியன் முகர்ந்தவுடன் அவர் மயங்கினார். இதையடுத்து அந்த நபர் மணியன் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு, ஒரு போலி செயினை மணியன் கழுத்தில் அணிவித்தார். மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு மணியன் தனது கழுத்தில் இருந்த நகையை பார்த்த போது அது போலி என தெரியவந்தது. புகாரையடுத்து, ஆர்.எஸ் புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.