/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொலைத்தொடர்பு ஆணையத்தில் இருந்து அழைப்பதாக கூறி முதியவரிடம் மோசடி
/
தொலைத்தொடர்பு ஆணையத்தில் இருந்து அழைப்பதாக கூறி முதியவரிடம் மோசடி
தொலைத்தொடர்பு ஆணையத்தில் இருந்து அழைப்பதாக கூறி முதியவரிடம் மோசடி
தொலைத்தொடர்பு ஆணையத்தில் இருந்து அழைப்பதாக கூறி முதியவரிடம் மோசடி
ADDED : ஜன 18, 2025 12:43 AM
கோவை; காரமடையை சேர்ந்தவர் சுப்பிரமணி, 75; தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது போன் எண்ணுக்கு கடந்த, 7ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில், இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தில் (டிராய்) இருந்து அழைப்பதாக கூறி பேசிய ஒருவர், சுப்பிரமணியின் மொபைல் எண்ணை பயன்படுத்தி, பண மோசடிகள் நடந்திருப்பதால், மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் மும்பையில் இருந்து, சி.பி.ஐ., அதிகாரி என ஒருவர் பேசியுள்ளார். அவர், பண மோசடி வழக்கில் சுப்பிரமணிக்கு தொடர்பு உள்ளதால், வங்கி கணக்கு, பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
தனது வங்கி கணக்கில் பணம் இல்லை என, சுப்பிரமணி தெரிவித்தும், தொடர்ந்து மிரட்டியுள்ளனர். சுப்பிரமணி, தான் ரூ.10 லட்சம் 'மியூச்சுவல் பண்ட்ஸ்'ல் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார். அந்த பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும், பணத்தை ஆய்வு செய்த பிறகு, திருப்பி அனுப்பி விடுவதாகவும் தெரிவித்தார். சுப்பிரமணி ரூ.10.60 லட்சத்தை, அவர் அளித்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன் பின், மோசடி நபர்கள் தொடர்பு கொள்ளவில்லை.
சுப்பிரமணி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.